'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் சத்யராஜ், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் எம்ஜிஆர் மகன் திரைப்படம் வரும் தீபாவளி நாளன்று, நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிஸீஸகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர் சசிகுமார் நடித்திருந்த, 'உடன்பிறப்பே' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவரின் ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நா நா ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிஸீஸுக்கு தயாராகவுள்ளது.
இதையும் படிங்க:'விக்ரமாதித்யா யார்?' கேள்வியுடன் வெளியாகும் பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' டீசர்!