தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜூன் 25 முதல் ஓடிடி தளத்தில் ‘மேதகு’ - தமிழீழ விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளமைக் கால வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Methagu_in_BS value ott
Methagu_in_BS value ott

By

Published : Jun 22, 2021, 7:54 PM IST

தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளமைக் கால வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘மேதகு’ திரைப்படம் ஜூன் 25ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டு இயக்கத்தில் குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, விஜய் ஆனந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் மேதகு. தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளமைக் கால வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் ஆயுதமேந்திய போராளியாக மாறியது குறித்து இப்படம் விவரிக்கிறது. இதற்கு முன்பே ஓடிடி தளத்தில் வெளியாகவிருந்த இப்படம், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

தற்போது இது BSvalue OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் மாரி செல்வராஜ், தீரா வரலாற்றின் தொடக்க புள்ளியாக உருவாக்கபட்டுள்ள “மேதகு”திரைப்படம் வருகின்ற ஜூன்-25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரம் பிற்பகல் 12:35 மணிக்கு BSvalue OTT தளத்தில் வெளியாகவுள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்களும் அன்பும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மேதகு 66 : தமிழினத்தின் தாயுமானவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் !

ABOUT THE AUTHOR

...view details