விஜய் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் மெர்சல். இதனை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார். மீண்டும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவருடைய ஃபோன் கவரில் நடிகர் விஜய்யின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இதனையடுத்து விஜய் ரசிகர் ஒருவர் அவரிடம், ‘எத்தனை நாட்களுக்கு விஜய் புகைப்படம் உள்ள இந்தக் கவரை வைத்திருப்பீர்கள், விஜய்யுடன் அடுத்த படம் எப்போது?’என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.
அந்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஹேமா ருக்மணி, “தளபதி புகைப்படம் இடம்பெற்றிருக்கும் இரண்டாவது ஃபோன் கவர் இது. என்னிடம் இன்னொன்றும் இருக்கிறது. தளபதி சொன்னவுடனே அடுத்த படம் பண்ணதயார்”என்று பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து, அவரின் இந்தப் பதிவுவிஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினராலும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.