தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மெமரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஷால் - விஷால் வெளியிட்ட மெமரிஸ் ஃபர்ஸ்ட் லுக்

சென்னை: நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள 'மெமரிஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மெமரிஸ்
மெமரிஸ்

By

Published : Aug 20, 2020, 2:49 AM IST

'எட்டு தோட்டாக்கள்', 'ஜீவி' போன்ற வித்தியாசமான படங்களில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி. இந்தப் படங்களுக்குப் பிறகு வெற்றி நடிக்கும் படம் 'மெமரிஸ்'. ஷ்யாம் பிரவீன் இயக்கும் இந்த படத்தை சிஜூதமீன்ஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மெமரீஸ்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்தப் போஸ்டரில் உள்ள 'மெமரிஸ்' என்கிற டைட்டலுக்கேற்ற ஹீரோவின் டிசைனும், மெமரிஸ் குறித்த வாக்கியமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டதால் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்த அறிவிப்புகளை, சுவாரஸ்யமான தகவல்களை அடுத்தடுத்து வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details