நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸ் பரவலின் தீவிரம் இன்னும் குறையாததால், ஊரடங்கை குறைந்தது 15 நாள்களாவது நீடிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிட்டத்தட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடங்கிபோனதில் கன்டென்ட் கிடைக்காமல் மீம் க்ரியேட்டர்ஸ் சோர்ந்திருந்தனர். இந்தச் சூழலில் சமுத்திரக்கனியைச் சம்பந்தமே இல்லாமல் அட்மிட் செய்தார்கள் மீம் க்ரியேட்டர்ஸ். ஆனால், மனசாட்சி உறுத்தியதால் என்னவோ அவரை சிறிது நாள்களிலேயே டிசார்ஜ் செய்தார்கள்.
இந்த நேரத்தில் மீம் க்ரியேட்டர்ஸின் காட் மதராக அவதரித்தார் மதுவந்தி. இவர் யாரென்று எளிதில் சொல்ல வேண்டுமென்றால் நீ.....ண்ட நாள்களாக தமிழ் சினிமாவில் நடித்துவரும் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள். மேலும், சென்னையிலுள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இவர் இருக்கிறார்.உலகத்தை மாதக் கணக்கில் சிறைப்பிடித்து வைத்திருக்கும் கரோனாவை, ஒன்பது நிமிடங்களில் டார்ச் லைட் அடிச்சு வதம் செய்வது எப்படி என்று அட்டகாசமான வீடியோவை வெளியிட மதுவந்தி மீம் சொத்தானார்.
அப்படி என்னதான் பேசினார்?
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் சுகாதாரப் பணியாளர்கள், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடிவரும் துய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்களின் தியாகத்தைப் பாராட்டும்வகையில், ஏப்ரல் 5ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் வீட்டிலுள்ள விளக்குகளை அணைத்து, அகல் விளக்குகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. விளக்கு ஏற்றுவதற்கும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று மோடி எந்த இடத்திலும் கூறவில்லை. ஆனால் பிரதமர் ஒன்று சொன்னால் உடனே அதற்கு ஏகப்பட்ட விளக்கங்களை உருவாக்கும் "வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி பட்டதாரிகள்" வழக்கம்போல் இந்த விவகாரத்திலும் செயல்பட்டார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக மதுவும் சேர்ந்து மூன்று விளக்கங்களை முன்வைத்தார்., அதாவது, ஏப்ரல் 9ஆம் தேதி ஒன்பது கிரகங்களும் ஒரே நேர்கோட்டுக்கு வருகிறது. அதற்காகவே பிரதமர் விளக்கு ஏற்ற சொன்னார் (இது பிரதமருக்குத் தெரியுமா?). 150 கோடி மக்கள் விளக்கு ஏற்றுவதால் உருவாகும் ஒளி கரோனாவையும் நாசம் செய்துவிடும். (இதனை அந்த ஒளி நம்புமா) சும்மா ஒரு ஜாலிக்கு லைட் ஆஃப் செஞ்சு, டார்ச் அடிங்க ( ஓ இது ஜாலி விளையாட்டா).
சுகாதாரத் துறை பணியாளர்களைப் பாராட்டுவதற்கு பிரதமர் ஒன்றை செய்ய சொன்னால், அதை அப்படியே மடைமாற்றி கிருமியை வதம் செய்யவும், கிரகங்கள் நேராக நிற்கும் என்றும் கூறி கண்டெண்ட் கொடுத்தார்.
இப்போ ஒரு குட்டி பிளாஷ்பேக் ஸ்டோரி: