அறிமுக இயக்குநர் எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மெய்'. இவர் மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், சித்திக் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் நிக்கி சுந்தரம் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
இப்ப நம்ம எடுக்கும் மருந்து நோய்க்கான தீர்வு இல்ல 'மெய்' சொல்லும் டிரெய்லர் - சித்திக்
கிஷோர் நடிப்பில் உருவாகிவரும் 'மெய்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
mei
நடிகர் கிஷோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவத் துறையில் காணப்படும் ஊழல்கள் பற்றியும், அங்கு நடக்கும் பிரச்னைகள் குறித்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்ட இப்படத்தை வி.என். மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். அனில் பிரித்வி குமார் இசை அமைக்கிறார்.
Last Updated : Aug 15, 2019, 1:19 PM IST