தமிழ் திரையுலகில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் மூலம் அறிமுகமானவர், மெஹ்ரீன் பிர்சாடா. இதனையடுத்து 'நோட்டா', தனுஷின் 'பட்டாஸ்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார் மெஹ்ரீன்.
இவருக்கும், பாவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் கடந்த மார்ச் 12ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது எடுத்த புகைப்படங்களையும் நடிகை மெஹ்ரீன் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்நிலையில் மெஹ்ரீன், பாவ்யா பிஷ்னோயைத் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நானும், பாவ்யாவும் இணைந்து எங்களுக்குள் நடந்த நிச்சயதார்த்துடன் அனைத்தையும் முடித்துக்கொள்கிறோம். நானும், பாவ்யாவும் இணைந்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். எங்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கான மரியாதை இன்னும், என் மனதில் இருக்கிறது. நான் பாவ்யா தொடர்பாக இந்த ஒரு அறிக்கையை மட்டும்தான் வெளியிடுகிறேன். அனைவரும் என் தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து நடந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். நான் எதிர்காலத்தில் சிறப்பாக வேலை செய்ய காத்திருக்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சமூக வலைதளத்தில் ஆபாச குறுஞ்செய்திகள்: சனம் ஷெட்டி புகார்!