சிம்பு நடிப்பில் உருவாகிவரும் பொலிட்டிக்கல் திரில்லரான ‘மாநாடு’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கிவரும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றனர். யுவன் இதற்கு இசையமைத்து வருகிறார், ஜூன் 21ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மெஹ்ரேஸிலா’ வெளியாகிறது.
தற்போது, மதன் கார்க்கி எழுதியுள்ள 'மெஹ்ரேஸிலா' பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் வெங்கட் பிரபுவும் யுவனும் தோன்றி 'மெஹ்ரேஸிலா' பாடல் குறித்து பேசியுள்ளனர். 'மெஹ்ரேஸிலா' பல அர்தம் இருப்பதாகவும் அது பாடலாசிரியர் மதன் கார்கிக்கு மட்டுமே தெரியும் எனவும் வெங்கட் பிரபு கூறினார். மேலும் இது தங்களது மற்றொரு குடும்ப பாடல் என வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.