கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, கடந்த 7 ஆம் தேதி தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிலும், குறிப்பாக அவரது மனைவி மேகனா ராஜை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில், கணவரை பிரிந்து வாழ்வது மிகவும் கடினமாக உள்ளது என்று குறிப்பிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை மேக்னா ராஜ், அவரது குடும்பத்தினருடன் இணைந்து சிரஞ்சீவி சர்ஜா கீழே சிரித்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "நீங்கள் இருந்தவரை என் வாழ்க்கை மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. நான் சோகமாக இருப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள், அதனால் இனிமேல் நான் சோகமாக இருக்க மாட்டேன்.
என்னுடைய சந்தோஷத்திற்கு நீங்கள் தான் காரணம். நீங்கள் கொடுத்த விலைமதிக்க முடியாத பரிசு, நமது குடும்பம். அது என்றும் நிலைத்திருக்கும். வி லவ் யூ பேபி" என்று குறிப்பிட்டுள்ளார்.