பத்ம குமார் இயக்கத்தில்மம்மூட்டி நடித்து உருவாகி வரும் வராலாற்றுத் திரைப்படம் "மாமங்கம்". இதில் பிரஜி தேசாய், மாளவிகா மேனன், உன்னி முகந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். இந்தப் படத்தை காவ்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மம்மூட்டியின் 56ஆவது திரைப்படமான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. அதில் இத்திரைப்படம் இவ்வாண்டு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மெகா ஸ்டாரின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - சினிமா
மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான ‘மாமங்கம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
மாம்மங்கம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக்
இத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்மூட்டி ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.