தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகையான த்ரிஷா சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து அவர் மீண்டும் சமூக வலைதளப்பக்கத்தில் நுழைவது குறித்து சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைக் கண்ட மீரா மிதுன், த்ரிஷாவை தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மீரா வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, "த்ரிஷா இது தான் உங்களுக்கு கடைசியான எச்சரிக்கை. அடுத்த முறை என்னைப்போல ஹேர் ஸ்டைல், என்னைப் போன்ற தோற்றம் என்று மார்ஃபிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையைத் தேடி கொள்ளுங்கள்" என்று அதில் பதிவிட்டுள்ளார். இது த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.