'நம்ம வீட்டு பிள்ளை' படத்தைத் தொடர்ந்து தற்போது 'அக்னிச் சிறகுகள் 'படத்தில் இருந்தும் மீரா மிதுன் நீக்கப்பட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் போட்டியாளராக மாடல் அழகி மீரா மிதுன் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் இவரது காலடி பட்ட நாள் முதலே கடும் சர்ச்சைகள் எழுந்தன. இவரால் எப்போதும் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட பின் ஒரு ஆணுடன் கவர்ச்சியாக நடனமாடும் வீடியோ அப்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது. பின் கொலை மிரட்டல் என வெளியேவந்தும் சலசலப்புகளுடன் இருந்து வந்தார்.
அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும் விஜய் ஆண்டனியின் அக்னிச் சிறகுகள் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் சமீபத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மீரா மிதுன் நடித்திருந்த காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை படக்குழு வெளியிட்டியிருந்தது . அதற்கு காரணம் சிவகார்த்திகேயனும் சன்பிக்சர்ஸூம் தான் என கூறி மீரா மிதுன் சர்ச்சை கிளப்பியிருந்தார்.
தற்போது மூடர் கூடம் இயக்குநர் நவீன், விஜய் ஆண்டனியை வைத்து ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மீரா மிதுன் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் தற்போது அவரை படத்தில் இருந்து நீக்கியுள்ளதாக மீரா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழில் அவரின் திரைத்துறை வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் வாசிங்க: ‘அவனைத் தூக்கு..!’ பிக்பாஸ் நடிகையின் சர்ச்சை ஆடியோ!