தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என் தந்தையை கொலை செய்தது இவர்கள்தான்: மோடி, ஸ்டாலினை டேக் செய்து மீரா ட்வீட் - மோடி

என் தந்தையை கொலை செய்தது இவர்கள்தான். எப்போது நடவடிக்கை எடுக்கப்படும், ஏன் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மோடி, ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.

Meera Mithun suicide threat
Meera Mithun suicide threat

By

Published : Jun 16, 2021, 5:48 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மோடியை டேக் செய்து நடிகை மீரா மிதுன் ட்வீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் ரவி, ஜோ மைக்கேல் பிரவின் என்ற கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் தனக்கு தொந்தரவு அளிப்பதாக ட்வீட் செய்து, முதலமைச்சர் ஸ்டாலினை நடிகை மீரா மிதுன் டேக் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு தொந்தரவு அளித்துவரும் இந்த நபர்கள் குறித்து 2019ஆம் ஆண்டு புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. காவல்துறை என்ன செய்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Meera Mithun sensational tweet

மேலும் அவர், என் தந்தையை கொலை செய்தது இவர்கள்தான். எப்போது நடவடிக்கை எடுக்கப்படும், ஏன் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மோடி, ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details