'மிஸ் சவுத் இந்தியா 2016' என்ற நிகழ்ச்சியை அஜித் ரவி என்பவர் நடத்தினார். அந்த ஆண்டு மீரா மிதுன், மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றார்.
இந்நிலையில் மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தை வைத்து, இரண்டு பேஷன் டிசைனர்களிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளதாகவும், மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வாங்கித் தருவதாகவும் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து வந்த புகாரில் மீரா மிதுனிடம் இருந்து அழகி பட்டத்தை திரும்பப் பெற்றதாக, மிஸ் சவுத் இந்தியா 2016 நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜித் ரவி தகவல் தெரிவித்தார்.
ஆனால் அஜித் ரவி, ஜோ மைக்கேன் ப்ரவீன் என்ற இருவரும்தான் கொலை மிரட்டல் விடுவதாக மீரா மிதுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
மேலும் தான் நடத்தும் மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியை தடுப்பதற்காக இருவரும் பல்வேறு வகையில் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் அழகிப் போட்டிகளில் தமிழ் பெண்கள் ஒதுக்கப்படுவது குறித்தும் அழகிப் போட்டிகளில் நடைபெறும் அரசியல் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனைத்தொடர்ந்து புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே அவரது 'miss south india 2016' பட்டம் பறிக்கப்பட்டதாக, அதன் நிறுவனம் தெரிவித்துள்ளது.