தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கை விட்ட பிக் பாஸ்: காப்பாற்றிய தமிழ் சினிமா! - agni siragugal

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட மீரா மிதுனுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

meera mithun

By

Published : Aug 16, 2019, 7:11 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பலருக்கும் பொழுதுபோக்கான ஒன்றாக அமைந்துள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும், அதிர்ஷ்டம் அடித்தது போல் தமிழ் சினிமாவில் தொடர் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. முன்பு சிவகார்த்திகேயனின் "நம்ம வீட்டு பிள்ளை" படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக மீரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து "அக்னி சிறகுகள்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீரா நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருண் விஜய், விஜய் ஆண்டனி நடித்துவரும் "அக்னி சிறகுகள்" படத்தில்தான் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று மீரா தற்போது பதிவிட்டுள்ளார். "மூடர் கூடம்" படத்தை இயக்கிய நவீனின் அடுத்த திரைப்படம் "அக்னி சிறகுகள்" என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details