தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -3 நிகழ்ச்சியில் 16ஆவது போட்டியாளராக மாடல் அழகி மீரா மிதுன் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் இவரது காலடி பட்ட நாள் முதலே கடும் சர்ச்சைகள் எழுந்தன. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இயக்குநர் சேரன் என்னை தொட்டார் என்று குற்றச்சாட்டு வைத்தார். இவரால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
மீரா மிதுன் மீது பார்வையாளர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட அடுத்த நாளே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை திக்குமுக்காட வைத்தார் மீரா மிதுன்.