தொடர்ந்து திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் குறித்து இழிவான கருத்து தெரிவித்து சர்ச்சையிலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர் மீரா மிதுன். தன்னை ஒரு சூப்பர் மாடல் எனக் கூறிவரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பிரபலம் அடைந்தார்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின்னர் பிரபல நடிகர்கள் குறித்து அவதூறாகப் பேசி அவர்களது ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகிவந்தார். இதனிடையே நடிகைகள் தன்னை காப்பி அடிக்கிறார்கள் என்ற விமர்சனத்தையும் முன்வைத்து சமூக வலைதளவாசிகளிடமும் வாங்கிக்கொண்டார்.
தற்போது அவர் சாதி ரீதியில் அடாவடியாகப் பேசியுள்ள காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது. அந்தக் காணொலியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் கூறி, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள், திரைப் பிரபலங்கள் தனது முகத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும் இந்தச் சமூகத்து இயக்குநர்களைத் திரைத் துறையை விட்டு விரட்ட வேண்டும் எனவும் தனது மனதின் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:பெண் அலுவலரைத் தப்பா பேசாதீங்க - அறிவுறுத்திய கிராம உதவியாளரை காலில் விழவைத்த கொடுமை!