சென்னை எழும்பூரில் வசிப்பவர் ஜோ மைக்கல் பிரவீன். இவர் மிஸ் தமிழ்நாடு அழகி போட்டிகளை எடுத்து நடத்தும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஜோ மைக்கல் பிரவீன் மே மாதம் 28ஆம் தேதி நடிகை மீரா மிதுன், தனது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பல மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்களிடம் லட்சக் கணக்கான பணத்தை ஏமாற்றியதாகவும், தனது நிறுவனத்தின் பெயரை கெடுத்துவருவதாகவும் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், , மீரா மிதுன் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜோ மைக்கல் பிரவீன்புகார் அளித்துள்ளார்.
கொலை மிரட்டல் விடுக்கும் மீரா மிதுன் இது தொடர்பாக மீரா மிதுன் அவரது நண்பர் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் அவர் சமர்பித்துள்ளார். தற்போது மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆடியோவில் ஜோ மைக்கல் பிரவினை கொலை செய்யவேண்டும் எனவும் அவனது கை,கால்களை உடைக்க வேண்டும் என மிரட்டும் தொனியில் மீரா மிதுன் பேசியுள்ளார். தற்போது இந்த ஆடியோவால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.