தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்த மீரா ஜாஸ்மின்! - சமூக வலைதளத்தில் இணைந்த மீரா ஜாஸ்மின்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள மீரா ஜாஸ்மின், முதன்முதலாக இன்ஸ்டாகிராமில் இணைந்து மகள் திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளதற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

மீரா ஜாஸ்மின்
மீரா ஜாஸ்மின்

By

Published : Jan 20, 2022, 12:58 PM IST

தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி, ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் இளசுகளின் மனதை கொள்ளையடித்துச் சென்றவர்.

தனது நடிப்பால் திரையில் மறக்க முடியாத பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர். 2003ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டிச்சென்றார். சிறிது இடைவேளைக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் முதல் பதிவு

இதுவரையிலும் எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களிலும் இணைந்திடாத மீரா ஜாஸ்மின், முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார்.

பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த நிலையில், தற்போது இயக்குநர் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மகள்' படத்தில் நடித்துள்ளார் மீரா. நடிகர் ஜெயராமுடன் இணைந்து 'ஜூலியட்' என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 'மகள்' திரைப்படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முதலாக பதிவிட்டுள்ளார் மீரா. வாழ்வின் புதிய தொடக்கத்தில் எல்லோருடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும், ரசிகர்களுடன் இணைந்திருப்பது, நமது வளர்ச்சிக்கு எந்தளவு முக்கியம் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து திரைத் துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் மீரா ஜாஸ்மினை இன்ஸ்டாகிராமிற்கு வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:சமூக வலைதளங்களில் தனுஷ் பெயரை நீக்காத ஐஸ்வர்யா!

ABOUT THE AUTHOR

...view details