நடிகை மீரா சோப்ராவின் (நிலா) தந்தை நேற்று காலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவரை கத்தியைக் காண்பித்து மிரட்டி, அவரது தொலைபேசியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனது அப்பா காலையில் வாக்கிங் சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், கத்தியைக் காண்பித்து மிரட்டி, அப்பாவின் தொலைபேசியை பறித்துச் சென்றனர். இது தான் டெல்லியில் உள்ள பாதுகாப்பா?' என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், டெல்லி காவல்துறையினரையும் டேக் செய்து, பதிவிட்டுள்ளார்.