தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#மீண்டும்நேசமணி- கமல் ஹாசனையும் விட்டு வைக்காத வடிவேலு ரசிகர்கள் - latest cinema news

கமல் ஹாசனின் 'விக்ரம்' பட போஸ்டரை வடிவேலு ரசிகர்கள் அதே பாணியில் மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மீண்டும்நேசமணி
மீண்டும்நேசமணி

By

Published : Jul 15, 2021, 4:42 PM IST

மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் திரைப்படம் ‘விக்ரம்’. கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமாக ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

விக்ரம் போஸ்டர்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போஸ்டரில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், கமல் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.

மீண்டும் ட்ரெண்டிங்கில் வடிவேலு

இந்நிலையில் இந்த போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் புகைப்படங்களுக்குப் பதிலாக 'பிரண்ட்ஸ்' படத்தில் நடித்திருந்த வடிவேலு, சார்லி, ரமேஷ் கண்ணா ஆகியோரின் புகைப்படங்களை விக்ரம் பட போஸ்டர் போல் வெளியிட்டுள்ளனர். அப்போஸ்டரை வடிவேலு ரசிகர்கள் #மீண்டும்நேசமணி என்ற ஹேஷ்டாக் உருவாக்கி ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

நேசமணி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று 'பிரண்ட்ஸ்' படத்தில் இடம்பெற்றிருந்த, வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆல்பம் பாடல் உருவாக்கி வெளியிட்ட 'ரேனிகுண்டா' நிஷாந்த்

ABOUT THE AUTHOR

...view details