தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மீண்டும் ஒரு மரியாதை' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு! - மீண்டும் ஒரு மரியாதை ரிலீஸ் தேதி

பாரதிராஜா இயக்கி, நடித்துள்ள 'மீண்டும் ஒரு மரியாதை' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'மீண்டும் ஒரு மரியாதை' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு
'மீண்டும் ஒரு மரியாதை' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

By

Published : Jan 25, 2020, 10:23 AM IST

பாரதிராஜா கடைசியாக 'பொம்மலாட்டம்' என்ற படத்தை இயக்கினார். அதற்கு பிறகு கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடித்து, இயக்கியுள்ள படம் 'மீண்டும் ஒரு மரியாதை'. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய நிலையில், ஒரு சில காரணங்களால் தாமதமானது. முதலில் இப்படத்தை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிர்மல் குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு சலீம் படத்தை இயக்க வாய்ப்பு வந்ததால் இப்படத்தில் இருந்து விலகி கொண்டார். இதற்கிடையில் பாரதிராஜாவே இந்த படத்தை இயக்கி, நடிக்க முடிவு செய்தார்.

'மீண்டும் ஒரு மரியாதை' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

இந்த நிலையில் கடந்த வருடமே படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்த மாதம் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்த்து போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.

இதில் மவுனிகா, ஜோ மல்லூரி, ராசி நட்சத்திரா ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜாவை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 1985ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், 'முதல் மரியாதை' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கிய சுசீந்திரன்!

ABOUT THE AUTHOR

...view details