தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமெரிக்க நடிகைக்கு கமல்ஹாசன் கொடுத்த பரிசு - நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் ட்விட்டர்

நடிகர் கமல்ஹாசனுடனான தனது நினைவலைகளை அமெரிக்க நடிகையான மெக்கன்ஸி வெஸ்ட்மோர் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

McKenzie Westmore shares memories with kamal hassan
McKenzie Westmore shares memories with kamal hassan

By

Published : May 20, 2020, 2:47 PM IST

'ஃபேஸ் ஆப்', 'மிஸ் மேட்ச்', 'பேஷன்ஸ்', 'ஆல் மை சில்ட்ரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அமெரிக்க நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர்.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் பற்றி ஒரு பதிவிடுள்ளார். அதில் 'கமல்ஹாசனை உங்களுக்கு தெரியுமா? என்று பலர் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள், அவர்களுக்கு இந்த இரண்டு படங்களும் பதில் கூறும்' என்று பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படங்கள் குறித்தும் அவர் பதிவில் விளக்கியுள்ளார். நான் சிறுமியாய் இருக்கும்போது என் தந்தை கமல்ஹாசனுக்கு மேக் அப் செய்திருக்கிறார். முதலாவதாக இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம். அடுத்ததாக எனது தந்தையாருடன் உள்ள புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் உடை கமல்ஹாசனால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உடை என குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனுடன் இருக்கும் முதல் புகைப்படம் எடுத்து சில ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் பிறகு கமலஹாசன் அவர்களை நேரில் சந்திக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க... ரூ. 20 லட்சம் கோடியில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் என்ன? கமல்ஹாசன் கேள்வி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details