தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சென்னை திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள 'மழையில் நனைகிறேன்' - சென்னை திரைப்பட விழா

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னே சுரேஷ் குமார் என்பவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'மழையில் நனைகிறேன்' என்ற திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.

mazhalaiyil nanaikiren
மழையில் நனைகிறேன் திரைப்படம்

By

Published : Feb 23, 2021, 7:41 AM IST

சென்னை:அழகான காதலை எதார்த்தமான வாழ்வியலோடு சொல்லும் விதமாக உருவாகியிருக்கும் 'மழையில் நனைகிறேன்' திரைப்படம் சென்னை திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் 'மழையில் நனைகிறேன்'. எதார்த்தமான வாழ்வியலுடன் அழகான காதலை சொல்லும் இந்தப் படம் சென்னை திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் டி. சுரேஷ் குமார் கூறியதாவது:

பொறியியல் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும், படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும், ஒரு கிறிஸ்த்தவ இளைஞனுக்கும், ஏற்படும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம்.

காதலில் ஒரு பிரச்னை வரும்போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. இல்லையென்றால் காதலர்களின் பெற்றோர் காயப்பட வேண்டி இருக்கிறது. இதைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.

படத்தில் சண்டைக் காட்சி இருந்தாலும் வில்லன் என்று யாரும் இல்லை. நாயகி அறிமுக காட்சியும், இறுதிக் காட்சியும் மழையில் நடக்கும். அதனால்தான் 'மழையில் நனைகிறேன்' என்ற இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என வைத்தோம்.

தற்போது படம் சென்னை திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாகும் அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்றார்.

இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் அன்சன் பால், 'பிகில்' படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

படத்துக்கு அறிமுக இசையமைப்பாளராக விஷ்ணு பிரசாத் என்பவர் அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் பள்ளியில் பயின்றவர்.

ஒளிப்பதிவு - கல்யான், படத்தொகுப்பு - வெங்கடேஷ். இயக்குநர் விஜி, கவின் பாண்டியன் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.

படத்தின் வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்ட ’எண்ணித்துணிக’ ஃபர்ஸ்ட் லுக்

ABOUT THE AUTHOR

...view details