தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாஸ்டர் வெற்றியால் ஓடிடிக்கு டாடா காட்டும் நடிகர்கள்! - master victory upcoming movies interesting to release in theatre news

மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து முன்னணி நடிகர்கள் தங்களது படங்களையும் திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர்.

மாஸ்டர் வெற்றியால் ஓடிடிக்கு கல்தா கொடுக்கும் நடிகர்கள்!
மாஸ்டர் வெற்றியால் ஓடிடிக்கு கல்தா கொடுக்கும் நடிகர்கள்!

By

Published : Jan 24, 2021, 1:14 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. கரோனா பிரச்னை, 50 விழுக்காடு இருக்கைகள் உள்ளிட்ட தடைகளை தாண்டி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்', விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், மாஸ்டர் வெற்றியால் மேற்குறிப்பிட்டுள்ள படங்களின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஓடிடி வெளியீட்டு தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. பிப்ரவரியில் 'சக்ரா' படத்தையும், ஏப்ரலில் 'சுல்தான்' படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க...கனவை நனவாக்கிய சோனாக்ஷி சின்ஹா...!

ABOUT THE AUTHOR

...view details