'மாநகரம்', 'கைதி' ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
நாளை வெளியாகும் மாஸ்டர் ட்ரெய்லர்? - மாஸ்டர் ட்ரைலர்
சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ’மாஸ்டர்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர்
இப்படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில் ’மாஸ்டர்’ படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்துள்ளனர்.
இந்நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜன.01) புத்தாண்டு பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிப் பண்டிகையன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.