இது "மாஸ்டர்" பொங்கல் - வைரல் வீடியோ - lokesh next movie
கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று மாஸ்டர் படக்குழுவினருடன் விஜய் பொங்கல் கொண்டாடிய வீடியோவை தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை: மாஸ்டர் படக்குழுவினருடன் விஜய் பொங்கல் கொண்டாடிய வீடியோவை அப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டியது. கரோனா காரணமாக தற்போதுதான் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று மாஸ்டர் படக்குழுவினருடன் விஜய் பொங்கல் கொண்டாடிய வீடியோவை தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.