விஜய் நடிப்பில் லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது 'மாஸ்டர்' திரைப்படம். ஆனால் கரோனா நோய்த் தொற்று காரணமாக திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு செயல்பட்டு வருகிறது.
இதனால் மாஸ்டர் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தின் பாடலான 'குட்டி ஸ்டோரி', 'வாத்தி கம்மிங்' பாடல் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
ஊரடங்கு நேரத்தில் திரை பிரபலங்கள் தங்களது ஓய்வு நேரத்தில் செய்யும் பணிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் சொந்தமாக யூடியூப் சேனல்களையும் தொடங்கி வீடியோக்களை பகிர்ந்துவருகின்றனர்.
நேற்று நடிகை வேதிகா 'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு க்யூட்டாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து தற்போது கிரண் ரத்தோட் வாத்தி கம்மிங் பாடலுக்கு அவரது ஸ்டைலில் ஹாட்டாக நடனமாடி வீடியோ தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் தற்போது நெட்டிசன்களை அதிகம் கவர்ந்து சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடனமாடிய வேதிகா - வைரலாகும் வீடியோ