தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம்: வெளியான தகவல்! - மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

aishwarya
aishwarya

By

Published : Jul 28, 2021, 6:05 PM IST

கி.பி.1000ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் கல்கிஎழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினம் 'பொன்னியின் செல்வன்'.

இந்த நாவலை மையமாக வைத்து தனது நீண்ட நெடுங்கால முயற்சிக்குப் பின் இயக்குநர் மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களை வைத்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றன.

இதன் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ராமோஜி ஃபிலிம்சிட்டி, ஜெய்ப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதுவரை 70 விழுக்காடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய் முன்னதாகக் கலந்துகொண்டார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'மாரி 2', 'சேதுபதி', 'றெக்க' உள்ளிட்ட படங்களில் நடித்த மாஸ்டர் ராகவன் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம்

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐஸ்வர்யா ராயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பொன்னியின் செல்வனின் நந்தினி தேவி, பாண்டிய இளவரசன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்!

ABOUT THE AUTHOR

...view details