தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம்: அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி! - மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர்

'மாஸ்டர்' படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இரண்டாவதாகத் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

Master
Master

By

Published : Apr 14, 2021, 7:41 PM IST

விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை எக்ஸ்பி ஃபிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்தார். மாஸ்டர் இவர் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமாகும். இந்தப்படத்தைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது படத்தை தயாரிக்கும் பணியில் எக்ஸிபி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் இறங்கியுள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. பன்முகத் திறமை வாய்ந்த இயக்குநர் விஷ்ணு வரதனுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் இளைய சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக இப்படத்தில் அறிமுகம் ஆகிறார்.

இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் எங்கள் நலன் விரும்பிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகாஷுக்கும், தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ மகள் சினேகா பிரிட்டோவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்ற அதர்வாவின் சகோதரர் திருமணம்

ABOUT THE AUTHOR

...view details