கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்துவருகிறார்.
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜய்யும் விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் இணையத்தில் லீக்காகி உள்ளதாக, செய்தி உலா வருகிறது. மாஸ்டர் படத்தில் உள்ள மொத்தப் பாடல்களின் விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.