'பிகில்' பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, சஞ்சீவ் என்று இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி மற்றும் ஷிமோகா போன்ற பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. அதில் விஜய் மற்றும் படத்தின் கதாநாயகி மாளவிகா இருவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருப்பது போல் உள்ளது. அந்தப் புகைப்படத்தை பார்த்தவர்கள் இது படத்தின் வரும் காட்சியின் புகைப்படமா அல்லது இருவரும் ஷூட்டிங் முடிந்த பிறகு சாதாரணமாக அமர்ந்து பேசும் போது எடுத்ததா என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர். இருப்பினும் அப்புகைப்படம் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.