நடிகர் விஜய் நடித்துள்ள, ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. ஒரு பக்கம் ரசிகர்கள் விஜய்யை ஒரு வருடம் கழித்து திரையில் காண ஆவலாக உள்ள நிலையில், மறுபக்கம் படத்தின் அப்டேட்டுகளை படக்குழு தினமும் வெளியிட்டுவருகிறது.
அதன்படி இன்று (ஜன. 11) படத்தின் முக்கிய போஸ்டர் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.