லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பொங்கலையொட்டி வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மாஸ்டர் வெற்றிக்கு அண்ணாமலையாரை நாடிய படக்குழு! - master crew worship at annamalaiyar temple
'மாஸ்டர்' திரைப்படம் வெற்றிபெற வேண்டி அப்படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் ஆகியோர் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
master crew worship at annamalaiyar temple
கரோனா பாதிப்புக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் பெரிய நடிகர் படம் என்பதால் இத்திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க... இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியிட தடை!