தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங் அடுத்து வாத்தியின் ரெய்டு! - மாஸ்டர் மூன்றாவது சிங்கிள் - வாத்தி ரெய்டு பாடல்

மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறவுள்ள நிலையில், தற்போது படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் ட்ராக் பாடலாக வாத்தி ரெய்டு வெளியிடப்பட்டுள்ளது.

Master 3rd single Vaathi raid unveiled by team
Vijay in Master movie

By

Published : Mar 14, 2020, 11:32 PM IST

சென்னை: மாஸ்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக் பாடலாக வாத்தி ரெய்டு என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஹிப் ஹாப் ஸ்டைலில் ஃபாஸ்ட் பீட்டுடன் அமைந்திருக்கும் வாத்தி ரெய்டு பாடலை அனிருத் பாடியுள்ளார். படத்தின் மூன்றாவது சிங்கிளாக வெளிவந்திருக்கும் இந்தப் பாடலின் போஸ்டரை முன்னதாகவே வெளியிட்டிருந்தனர்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதில் நடிகர் விஜய் ரசிகர்கள் முன்னிலையில் என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், தற்போது ரசிகர்களுக்கு ட்ரீட் அளிக்கும் விதமாக வாத்தி ரெய்டு என்று பாடலை வெளியிட்டுள்ளனர்.

’தப்பு செஞ்ச வாத்தி ரெய்டு, வான்டடா மாட்டிறாதே ஓடிப்போயிடு’ என்று மாஸ் வரிகளுடன் பாடலில் அமைந்திருக்கும் நிலையில், படத்தில் முக்கியமான திருப்புமுனைக் காட்சியில் இந்தப் பாடல் இடம்பெறும் எனத் தெரிகிறது. அத்துடன் பாடலில் விஜய் ஆக்‌ஷன் புகைப்படங்கள் இடம்பிடித்திருப்பதால் அனல் பறக்கும் சண்டைக் காட்சியும் பாடலோடு வரலாம் எனத் தெரிகிறது.

இந்தப் பாடலை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருவதால் ட்ரெண்டாக்கில் டாப் இடத்தில் உள்ளது. குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங், வாத்தி ரெய்டு என மூன்று பாடல்கள் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details