இந்த ஆண்டு மக்களின் பரபரப்புக்கு தீனி போட்டு முடிவு பெற்றது 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம். படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களான 'ஐயர்ன் மேன்', 'கேப்டன் அமெரிக்கா', 'தோர்', 'டாக்டர் ஸ்ரேஞ்ச்', 'பிளாக் பாந்தர்' ஆகியோருக்கு பின்னணி கதை அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் லேடிஸ் சூப்பர் ஹீரோவான நடாஷா ரோமனாஃப்புக்கு பின்னனி கதை இல்லாதது, ரசிகர்கள் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை ஏறுபடுத்தியது. அத்துடன் அவெஞ்சர்ஸ் எண்ட் கேமிலேயே ப்ளாக் விடோ கதாப்பாத்திரத்துக்கு கதாசிரியர்கள் முடிவு கட்டியது இன்னொரு கதை. ஆனால் மீண்டும் உயிர் பெறும் ஃபீனிக்ஸ் பறவையாக ப்ளாக் விடோவின் பின்னணி கதையை மார்வெல் ஸ்டூடியோஸ் அடுத்த ஆண்டு வெளியிடுகிறது.