அமெரிக்காவின் பிரபல மார்வெல் நிறுவனத்தின் காமிக் புத்தகங்களுக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்நிறுவனம் 'கேப்டன் அமெரிக்கா', 'ஹல்க்' போன்ற கதாபாத்திரங்களை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது.
பிற்காலத்தில், அந்நிறுவனத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் மூலம் சூப்பர் ஹீரோ அனிமேஷன் படங்களைத் தயார் செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் படத்தயாரிப்பதிலும் ஈடுபடத்தொடங்கி, தங்களின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை திரைப்படமாக எடுக்கவும் தொடங்கியதோடு, சூப்பர் ஹீரோ படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஸ்பைடர் மேன்', 'பென்டாஸ்டிக் ஃபோர்', 'அயர்ன் மேன்', 'தி இன்கிரெடிபில் ஹல்க்', 'தோர்', 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மூன்று கட்டங்களாக இந்நிறுவனம் மொத்தம் 23 படங்களை வெளியிட்டுள்ளது.
இதில் இறுதியாக 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படமே இந்த வரிசையில் கடைசிப் படம். இப்படம் உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்தது. தற்போது மார்வெல் சினிமா நான்காம் கட்ட வேலைகளில் இறங்கியுள்ளது.
இந்த படங்களில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்துக்குத் தனி ரசிகர்கள் உள்ளன. இதுவரை கேப்டன் அமெரிக்கா ஃபர்ஸ்ட் அவெஞ்சர், கேப்டன் அமெரிக்கா விண்டர், கேப்டன் அமெரிக்கா சிவில் வார் ஆகிய படங்கள், இந்த கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து வெளியானது. இதில் கேப்டன் அமெரிக்காவாக க்ரிஸ் ஈவன்ஸ் நடித்திருந்தார்.
'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படத்தின் கிளைமேக்ஸில் க்ரிஸ் ஈவன்ஸ் தனது கேப்டன் அமெரிக்கா ஷீல்டை சாம் வில்ஸனிடம் கொடுப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டது. இதனையடுத்து 'கேப்டன் அமெரிக்கா' க்ரிஸ் ஈவன்ஸின் பங்கு முடிந்து விட்டது.
அடுத்த கட்டமாக நடிகர் ஆந்தனி மெக்கீ (சாம் வில்ஸன்) மையமாக வைத்து 'கேப்டன் அமெரிக்கா' திரைப்படத்தின் 4வது பாகமான 'பால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்' திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
டிஸ்னி+ஓடிடி தளத்தில் வெளியான 'பால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்' வெப் சீரிஸ் ரசிகர்களிடையே பெரும் வரேவற்பை பெற்றதையடுத்து, இதனை படமாக்கும் முயற்சியில் மார்வெல் ஸ்டூடியோ உள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.