உலகப் புகழ்பெற்ற காமிக்ஸ் நிறுவனமான மார்வெலின் படைப்புகள் அமெரிக்காவைத் தாண்டியும் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான அயர்ன்மேன் படத்தின் மூலம் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை 2019ஆம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்', 'ஸ்பைடர் மேன்: அவே ஃப்ரம் தி ஹோம்' திரைப்படங்களுடன் முடிந்தது. 11ஆண்டுகளில் 3 கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இந்த வரிசையில் வெளியாகியுள்ளன.
இதன் அடுத்தகட்டமாக புதிய திரைப்படங்கள், பழைய திரைப்படங்களின் தொடர்ச்சிகள் என புதிய அறிவிப்பை மார்வெல் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மார்வெல் ஒரு காணொலியை தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
கரோனா நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்காவில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்புவதால் மீண்டும் ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவேற்கும் வண்ணம், இந்த காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 2023ஆம் ஆண்டு வரை நான்காவது கட்டத்துக்கான படங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
புதிய திரைப்படங்கள் அதன் வெளியீட்டுத் தேதிகள் பின்வருமாறு:
- பிளாக் விடோ - ஜூலை 9, 2021
- ஷாங்க் சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்கஸ் - செப்டம்பர் 3, 2021
- எடர்னல்ஸ் - நவம்பர் 5, 2021
- ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் - டிசம்பர் 17, 2021
- டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் - மார்ச் 25, 2022
- தார்: லவ் அண்ட் தண்டர் - மே 6, 2022
- பிளாக் பாந்தர் 2: வகாண்டா ஃபாரெவர் - ஜூலை 8, 2022
- கேப்டன் மார்வெல் 2/ தி மார்வெல்ஸ் - நவம்பர்11, 2022
- ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்: குவாண்டமேனியா - பிப்ரவரி 17, 2023
- கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3 - மே 5, 2023