ஹாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மார்டின் ஸ்கார்சசி. அவர் ஹாலிவுட் திரைப்படங்களை வேறு தளத்திற்கு கொண்டு சென்றவர் என்று சொன்னாலும் மிகையாகாது. சமீபத்தில் அவர் மார்வல் திரைப்படங்கள் எல்லாம் திரைப்படங்களே அல்ல என ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு மார்வல் ரசிகர்கள் பலரும் மார்டினை கலாய்த்தனர். மார்வல் படத்தில் நடித்தவரான சாமுவேல் ஜாக்சன், மார்டின் ஸ்கார்சசியை விமர்சித்தார்.
தற்போது மார்டின், மார்வல் திரைப்படங்கள் எல்லாம் திரைப்படங்களே அல்ல என கூறினேன். அதுகுறித்து நான் விளக்கமளிக்க விரும்புகிறேன் என்ற தலைப்பில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர், பல திறமையான கலைஞர்கள் சேர்ந்து இங்கு பல திரைப்படங்களை உருவாக்குகின்றனர். அதை நீங்களும் திரையில் கண்டு மகிழ்கிறீர்கள். ஆனால் அந்தத் திரைப்படங்கள் என்னை ஈர்க்கவில்லை என்பது என் தனிப்பட்ட ரசனை, கருத்தை சார்ந்தது.