தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சாமிக்கண்ணு'க்கு விரைவில் திருமணமா...!

நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By

Published : Aug 1, 2019, 8:59 AM IST

Premgi amaran

பாடகர் கங்கை அமரனின் மகனும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான நடிகர் பிரேம்ஜி தமிழ் சினிமாவில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களில் இவர் நடித்திருப்பார். 'சென்னை 28', 'மங்காத்தா', 'கோவா' உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இவர் நடிகராக மட்டுமல்லாது இசையமைப்பளராகவும் சில படங்களுக்கு இசையமைத்தும்-பாடியும் வருகிறார். தமிழ் திரையுலகில் பன்முகத் தன்மைகொண்ட இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆணும் பெண்ணும் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஒவர் என்று எழுதப்பட்ட டி-சர்ட்டை அணிந்து தோன்றியுள்ளார். பிரேம்ஜியின் இந்த ட்வீட்டை பார்த்த திரைத் துறையினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details