தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நான் டாக்டருல்ல... டான்..!' - மார்க்கெட் ராஜா டீசர் ரிலீஸ் - மார்க்கெட் ராஜா

'பிக்பாஸ்' புகழ் ஆரவ், காவ்யா தாப்பர் நடிப்பில் சரண் இயக்கத்தில் உருவாகிவரும் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வெற்றியாளரின் அடுத்த பட டீசர் வெளியீடு

By

Published : Jul 12, 2019, 6:55 PM IST

பிக்பாஸ் சீசன் ஒன்றின் மூலம் புகழ் பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் வெற்றி, ஓவியாவுடன் காதல் கிசு கிசு என்று மிகவும் பரபரப்பாகவே இருந்த ஆரவ் தற்போது திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'ஜெமினி' என்று பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சரண். இவரது இயக்கத்தில் ஆரவ், காவ்யா தாப்பர், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மார்க்கெட் ராஜா'.

தற்போது இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details