'மஸ்திசாதே’, ‘சத்யமேவ ஜெயதே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மிலாப் சாவெரி, ‘மர்ஜாவான்’ (#Marjaavaan) எனும் மரண மாஸான படத்தை எடுத்திருக்கிறார். பாலிவுட்டில் புதிய முயற்சி செய்யும் இயக்குநர்களின் படங்கள் அதிக அளவில் வெளியானாலும், மசாலா என்டர்டெயினருக்கும் பஞ்சமில்லை. சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக், தாரா சுடாரியா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள முழுநீள மசாலா என்டர்டெயினர் ‘மர்ஜாவான்’.
#Marjaavaan டிரெய்லர் - இந்தி படமா இது, சொல்லவேயில்ல! - ritesh deshmuk
சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மர்ஜாவான்’ (#Marjaavaan) டிரெய்லர் காண்போரை கதிகலங்க வைக்கும் வகையில் உள்ளது.
Marjaavaan trailer
நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக அதீத சண்டைக் காட்சிகள் தெலுங்கு படங்களில் மட்டுமே இருக்குமென்ற கருத்து நிலவுகிறது. ஆனால் தெலுங்கு படங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ’மர்ஜாவான்’ டிரெய்லர் இருக்கிறது. வில்லனின் அடியாட்களை இரண்டு கிலோ மீட்டர் பறக்கும்படி அடிப்பது, முதுகெலும்பை உடைப்பது என டிரெய்லர் கதிகலங்க வைக்கிறது.