தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’கர்ணன்’. கலைப்புலி தாணு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தொடர்ந்து இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ் - karnan movies
சென்னை: ’கர்ணன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்ணன்
இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், ”கர்ணன் படத்தை வெற்றியடைய வைத்த மக்களுக்கு மிக்க நன்றி. கர்ணனுக்காக நாங்கள் பாடுபட்டதற்கு மக்கள் அன்பு கொடுத்துள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.