தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தனுஷை சந்திக்க லண்டன் பறந்த மாரி செல்வராஜ்! - பரியேறும் பெருமாள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷை சந்தித்து, அடுத்த படம் குறித்த ஆலோசனைப் பெற இயக்குநர் மாரி செல்வராஜ் லண்டன் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dhanush and mari selvaraj

By

Published : Sep 25, 2019, 12:34 PM IST

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். சமூகத்தில் நிலவும் சாதிய வன்மத்தை அப்பட்டமாக காட்டிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் சர்தேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தார். இவரது அடுத்த படைப்பு என்ன என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், அவர் தனுஷை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Mari selvaraj in london

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துவரும் தனுஷ், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் படம் குறித்து ஆலோசனை செய்ய மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் லண்டனில் படப்பிடிப்பில் இருக்கும் தனுஷை சந்தித்துள்ளனர்.

Rajisha Vijayan

லண்டனில் இருந்து திரும்பியதும் ‘தனுஷ் 41’ ( #D41 ) படத்துக்கான பணிகளை மாரி செல்வராஜ் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கயிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #HBD_Dhanush: போராடினால் நாம் வெல்லலாம்..!

ABOUT THE AUTHOR

...view details