தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கால தாமதமாக வந்த ஆம்புலன்ஸ், உயிரிழந்த நடிகை! - பூஜா சஞ்சார்

இரண்டு மராத்திப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த பூஜா சஞ்சார் என்ற 25 வயது மராத்தி நடிகைக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் தாமதமாக வந்த காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Marathi actress Pooja Zunjar

By

Published : Oct 23, 2019, 11:02 PM IST

மராத்தி நடிகை பூஜா சஞ்சார் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரை இழந்துள்ளார். மகாராஷ்டிராவின் ஹிங்கோலி என்ற இடத்தில் வசித்து வந்த அவருக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அருகில் உள்ள கோரேகாவ் என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரது குடும்பத்தினர் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்து விட்டது.

அதன் பிறகு நடிகையின் நிலையும் மோசமடைந்துள்ளது. அதனால் அவரை ஹிங்கோலி சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். 40 கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை இருந்ததால், அங்கு கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் திணறியுள்ளனர். காலதாமதமாக ஒரு தனியார் ஆம்புலன்சில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பூஜா உயிரிழந்துள்ளார். காலதாமதமில்லாமல் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என பூஜாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காத்திருக்கும் கல்யாணிக்கு கமெண்ட் அடித்த இயக்குநர்!

ABOUT THE AUTHOR

...view details