தமிழ் சினிமாவில் 'காதல் மன்னன்' எனும் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சரண். அடுத்து, அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்கள் மூலம் கமர்சியல் இயக்குநராக உருவெடுத்தார். ஆனால், மோதி விளையாடு, அசல், ஆயிரத்தில் இருவர் என அடுத்தடுத்த தோல்விகளால், படங்கள் இயக்குவதில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அப்ப நான் சாதா... இப்போ நான் தாதா...! - 'மார்க்கெட் ராஜா' சிங்கிள் ட்ராக் ரிலீஸ் - மார்க்கெட் ராஜா
சரண் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ், ராதிகா சரத்குமார் நடிக்கும் 'மார்க்கெட் ராஜா' படத்தின் கலக்கலான கானா சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது.
தற்போது 'பிக்பாஸ்' புகழ் ஆரவ் கதாநாயகனாக வைத்து 'மார்க்கெட் ராஜா' எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் இரண்டாம் பாகமாக எடுத்துள்ளார். படத்தில் ராதிகா சரத்குமார் அதிரடி தாதாவாகவும், அவரது உதவியாளராக ஆரவ் நடித்துள்ளார். சிமோன் கே கிங் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.
இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அப்ப நான் சாதா... இப்போ நான் தாதா... எனும் சிங்கிள் ட்ராக் தற்போது வெளியாகியுள்ளது. சென்னா கானா ஸ்டைலில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலில் உள்ள வரிகள், ஜாலியாகவும், கதாநாயகனின் கேரக்டரை அறிமுகப்படுத்தும் விதமாகவும் உள்ளது. தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.