தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

"மரபு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - Marabu Movie Latest Updates

வி.ஐ.பி பிலிம் வழங்கும் இயக்குநர் விக்டர் இம்மானுவேலின் "மரபு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

மரபு படம்  மரபு படம் பர்ஸ்ட் லுக்  மரபு தமிழ் திரைப்படம் 2021  Marabu Movie  Marabu Movie First Look  Marabu Tamil Movie 2021  Marabu Movie Latest Updates  Marabu Movie First Look Release
Marabu Movie First Look

By

Published : Mar 21, 2021, 3:40 PM IST

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ளது மரபு திரைப்படம். ஒவ்வொரு நாடும், பகுதியும், இனமும் உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து, தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு, வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.

அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப்படுகிறது. அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். ஆனால், தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு.

மரபு படக்குழு

எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி "மரபு" என்ற பெயரிலே ஒரு புதிய முயற்சியுடன் புதிய படக்குழு களமிறங்குகிறது. படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'புஷ்பா' அல்லு அர்ஜூனுக்கு வில்லானகும் ஃபகத் பாசில்!

ABOUT THE AUTHOR

...view details