நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் வரலாற்று திரைப்படமான 'பிரித்விராஜ்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னாள் உலகி அழகி மானுஷி கையொப்பமிட்டுள்ளார். பிரித்விராஜாக வரும் அக்ஷய் குமாரின் காதலியாக சன்யோகீதா கதாபாத்திரத்தில் மானுஷி நடிக்கவிருக்கிறார்.
பிரமாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படம் மானுஷிக்கு அறிமுகத் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசுகையில், அக்ஷய் குமாருடன் நடிப்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும், திரைத்துறையில் சிறந்த ஒருவருடன் தான் நிறைய கற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.