மலையாள சின்னத்திரையுலகில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று மனோரமா. இந்த தொலைக்காட்சி நிறுவனம், வருடம் தோறும் சினிமா விருதுகளை வழங்கிவருகிறது.
ஸ்டண்ட் சில்வாவுக்கு சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது - கொடுத்தது யார் தெரியுமா? - மனோரமா
ஸ்டண்ட் சில்வாவுக்கு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் சிறந்த சண்டை காட்சி விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.
இந்நிலையில், மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'லூசிஃபர்' படத்தில் ஸ்டண்ட் இயக்குநராக பணிபுரிந்த ஸ்டண்ட் சில்வாவுக்கு சிறந்த சண்டை காட்சி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்டண்ட் சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறந்த இயக்குநர் விருதை படத்தின் இயக்குநர் பிரித்விராஜ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
சில்வா, தமிழ் சினிமாவில் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணிபுரிந்தும் நடித்தும் வருகிறார்.