நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'டாக்டர்' படத்தை இயக்கிய நெல்சன் அடுத்தாக நடிகர் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசை அமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே இருவரில் யாரேனும் ஒருவர் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 'தளபதி 65' படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் விஜய்யின் நண்பன் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
இது குறித்து மனோஜ் பரமஹம்சா தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டு மக்களால் நேசிக்கப்படும் மிக விரைவில் முழு தேசத்தினாலும் நேசிக்கப்படும் ஒரு அற்புதமான மனிதருடன் மற்றொரு பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'நண்பன்' படத்தில் முடித்த பயணத்தை 'தளபதி 65' படத்தின் மூலம் தொடங்குவதை எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு பான் இந்தியா படமாக இருக்கப்போகிறது. எல்லோரும் தயாராகுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் 'தளபதி 65' படத்தில் சண்டை இயக்குநராக 'கேஜிஎஃப் 2' படத்தில் பணியாற்றிய அன்பறிவு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், "அடுத்தாண்டு (2022) 'கேஜிஎஃப்' ஆக்ஷன் காட்சிகளை மறந்து 'தளபதி 65' ஆக்ஷன் காட்சிகளைப் பற்றிதான் பேசுவீர்கள். அந்த அளவுக்கு ஒரு பவர் பேக்காக இருக்கும்" எனக் கூறியிருந்தார். இவரின் இந்தப் பேச்சை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாட ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: தளபதி 65 படப்பிடிப்பு எப்போது?